கனடாவில் மீண்டும் குண்டு தாக்குதல் எச்சரிக்கை!
கனடாவில் மீண்டும் குண்டு தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யூத மத வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள், ஷொப்பிங் மால்கள் துறைமுகங்கள், உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு நாடு முழுவதும் குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தல் விடும் நபர்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணைகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூத மத வழிபாட்டுத்தலங்கள், நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.