கனடாவில் ஆயுத முனையில் வாகன கொள்ளை முயற்சி
கனடாவில் ஆயுதமுனையில் வாகனம் ஒன்றை மூன்று சிறுவர்கள் கொள்ளையிட முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஒன்றை காண்பித்து அச்சுறுத்தி வாகனம் கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியை காண்பித்து வாகன சாவியை வழங்குமாறு அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தின் போது குறித்த வாகனத்தின் சாரதி சாவியை சந்தேக நபர்களிடம் வழங்காது அதனை தூக்கி வீசி எறிந்துள்ளார்.
இதன் போது சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை தாக்கி அவருடைய அலைபேசியை களவாடி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.