மரத்தில் மோதிய கார்... வாழ்வு துவங்கும் நேரத்தில் பரிதாபமாக முடிந்துபோன மூன்று இளம் கனேடிய ஹாக்கி வீரர்களின் வாழ்வு
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் கார் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்கள்.
Caleb Reimer (16), Ronin Sharma (16), மற்றும் Parker Magnuson (17) என்னும் அந்த மூன்று இளைஞர்களும் இப்போதுதான் வளர்ந்து வரும் இளம் ஹாக்கி விளையாட்டு வீரர்கள். பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கும் நிலையில் விபத்து அவர்களை பலிவாங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை சர்ரேயிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் அவர்கள் பயணிக்கும்போது, அதிகாலை 2.45 மணியளவில் அவர்கள் பயணித்த கார் மரம் ஒன்றில் மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர்கள் மூவரும் பலியாகிவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எதனால் இந்த விபத்து நடந்தது என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.