பிரான்ஸ் பாடசாலையில் இருந்து மாயமான மூன்று மாணவர்கள்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இருந்து மூன்று மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
மாணவர்கள் வெளியேறியதை ஆசிரியர்கள் கவனிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் Balard பகுதியில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத ஆரம்ப பாடசாலை ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நான்கு வயதுடைய மூன்று மாணவர்கள யாரும் அறியாத வண்ணம் வெளியேறியுள்ளனர்.
பின்னர் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழித்து, பாடசாலையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலையில் வைத்து அவர்கள் மீட்கப்பட்டனர். பாதசாரி ஒருவரால் குறித்த மாணவர்கள் கவனிக்கப்பட்டு, மாணவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதுவரை பாடசாலையில் இருந்து மாணவர்கள் வெளியேறியுள்ளமை அவதானிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வகுப்பறையின் கதவுகள் மூடப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் அவதானிப்புடன் இல்லை எனவும் பெற்றோர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, பாடசாலையின் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.