ஆபத்தான நிலையில் இளைஞர் உட்பட மூவர் மீட்பு
ஒன்ராறியோவின் ஹாமில்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உட்பட மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஸ்டோனி க்ரீக்கில் அமைந்துள்ள ஷாப்பிங் பிளாசா அருகே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது என ஹாமில்டன் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இரவு 7.45 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்ற நிலையில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் மூவரை அடையாளம் கண்டுள்ளனர்.
அதில் ஒருவர் எந்த சலனமும் இன்றி காணப்பட்டதாகவும் ஹாமில்டன் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞர் மற்றும் 37 வயது நபரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இன்னொரு 25 வயது நபர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், அவரும் மருத்துவமனைக்கு கொண்டுள்ளச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.