வளர்ந்து வரும் ஹொக்கி வீரர்கள் மூவருக்கு சர்ரே சாலையில் ஏற்பட்ட துயரம்
சர்ரே சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூவரும் வளர்ந்து வரும் ஹொக்கி வீரர்கள் எனவும் Caleb Reimer, Ronin Sharma மற்றும் Parker Magnuson ஆகிய மூவருமே அவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சர்ரே பொலிசார் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்ற போதும், மரணமடைந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர் என தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்தில் சிக்கிய மூன்று இளைஞர்களும் நெருங்கிய நண்பர்கள் எனவும், தங்களின் விளையாட்டுக்காக வாழ்ந்தவர்கள் எனவும் நண்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குறித்த இளைஞர் மூவரும் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மூவரும் சம்பவயிடத்தில் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.