அம்புலன்ஸில் மோதி சிதைந்த முச்சக்கரவண்டி ; ஒருவர் பலி, பலர் படுகாயம்

Kurunegala Sri Lanka Police Investigation Accident Death
By Vironika Mar 19, 2026 12:24 AM GMT
Report

குருநாகல் - குளியாப்பிட்டி பிரதான வீதியின் லபுயாய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அம்புலன்ஸில் மோதி சிதைந்த முச்சக்கரவண்டி ; ஒருவர் பலி, பலர் படுகாயம் | Three Wheeler Crashing Into Ambulance

ஒருவர் உயிரிழப்பு

அதிவேகமாக வந்த அம்புலன்ஸ் வாகனம், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் லபுயாய பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது விபத்தின் வீரியத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த ஐவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாவனல்ல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயது நபர் ஒருவர் என்பதுடன் அவர் பாதணிகள் விற்பனை செய்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய நால்வரும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்துக்குள்ளான அம்புலன்ஸ் வண்டியானது குளியாப்பிட்டிய மருத்துவமனைக்கு சொந்தமானதாகும். நோயாளியை மருத்துவ குழுவினருடன் குருநாகல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்பின் அம்புலன்ஸ் வண்டியில் இருந்த நோயாளி வேறு அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US