இலங்கையில் ஹெல்மட் அணியாமல் பயணித்த இளைஞன் உயிரிழப்பு
இலங்கையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணியாமல் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் மதுசங்க (வயது 16) என்ற சிறுவன் உடனடியாக உயிரிழந்துள்ளதுடன் அதே பகுதியைச் சேர்ந்த இசுரு அக்சன் (வயது 20) படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்