லண்டனில் பரபரப்பு; மூவர் மீது கத்திக்குத்து
இங்கிலாந்து நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் லிவர்பூல் (liverpool) ஸ்ட்ரீட் ஸ்டேசன் பகுதியருகே இன்று காலை திடீரென 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இ ந்த சம்பவம் பற்றி அறிந்ததும், லண்டன் நகர போலிஸார் அந்த பகுதிக்கு உடனடியாக சென்றடைந்தனர்.
அத்துடன் சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் தாக்குதல் நடந்திருக்க கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
We received reports of three stabbings & a person pushed to the floor on Bishopsgate at 9.46am & officers arrived at the scene at 9.51am. Three victims were taken by LAS to a nearby hospital to be treated.
— City of London Police (@CityPolice) October 6, 2022
This is an ongoing situation, but is not being treated as terror-related
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் தெரிய வராத நிலையில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.