கனடாவில் ஒரே நாளில் 30 இடங்களில் 250 கிலோ மீற்றர் தூரத்தை நீந்திக் கடந்த நபர்
கனடாவில் ஒரே நாளில் அதாவது 12 மணித்தியாலங்களில் 250 கிலோ மீற்றர் நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
ஒன்றாரியோவின் தன்டர் பே பகுதியைச் சேர்ந்த 44 வயதான கெவின் சிட்லார் என்ற நபரே இவ்வர்று சாதனை படைத்துள்ளார்.
12 மணித்தியால இடைவெளியில் குறிப்பிட்ட கிலோ மீற்றர் தூரத்தை நீந்திக் கடந்துள்ளார்.
இதில் விசேட அம்சம் யாதெனில் இந்த 250 கிலோமீற்றர் தூரம் என்பது 30 வெவ்பேறு இடங்களில் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை காலத்தை நினைவுள்ளதாக மாற்றும் நோக்கில் இவ்வாறு பல இடங்களில் தாம் நீந்திக் கொண்டாடியதாக அவர் தெரிவிக்கின்றார்.
சூரிய உதயத்திற்கு அஸ்தமனத்திற்கும் இடையில் 35 இடங்களில் நீந்துவது தமது இலக்கு என்ற போதிலும், 30 இடங்களையே தம்மால் நீந்திக் கடக்க முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.