ஒன்றாரியோவில் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிஷ்டம்
ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டனில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 60 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை வென்றுள்ளார்.
லியா முராடோ கிரேஸியஸ் என்ற பெண்ணே இவ்வாறு பாரியளவு பணத் தொகையை பரிசாக வென்றெடுத்துள்ளார்.
லொட்டோ ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த பெண் பரிசு வென்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சீட்டிலுப்பில் குறித்த பெண்ணுக்கு இந்த பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் மூலம் 5 டொலர்கள் செலுத்தி லொத்தர் சீட்டினை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார் எனவும், இணையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட டிக்கட் ஒன்றுக்கு கிடைக்கப் பெற்ற மிகப் பெரிய பரிசுத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பரிசு வென்றெத்தமை குறித்து லொத்தர் சீட்டு நிறுவனம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்த போதிலும் கிரேஸியஸ் அதனை உடனடியாக பார்க்கவில்லை.
பின்னர் பரிசுத் தொகை குறித்து அறிந்து கொண்ட போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.