அதிக டொருக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் பயணித்த ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலர்களுக்கு (£300,000) விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்ற பயணியின் கடிதம் இன்று (27) வில்ட்ஷயரில் உள்ள ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தில் ஒரு பெயர் குறிப்பிடாத வாங்குபவரால் வாங்கப்பட்டது.
இது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கடிதம் 1912 ஏப்ரல் 10 ஆம் திகதி, அவர் சவுத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறிய நாளிலும், வடக்கு அட்லாண்டிக்கில் ஒரு பனிப்பாறையில் மோதி அது மூழ்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பும் திகதியிடப்பட்டுள்ளது.