கல்கரியில் வாகன விபத்தில் சிறுமி பலி
கனடாவின் கல்கரியில் வாகனம் மோதியதில் இரண்டு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாலை 6:55 மணியளவில் டாரடேல் டிரைவ் வடகிழக்கு 600 தொகுதியில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அம்புலன்ஸ் ஆல்பர்ட்டா குழந்தைகள் மருத்துவமனையை விரைவாக அடைய உதவுவதற்காக பொலிஸார் பல சந்திப்புகளை மூடினர், ஆனால் சிறுமி தனது காயங்களால் உயிரிழந்தார்.
வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடாமல் இருந்து, பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடிபோதையில் இந்த விபத்து இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.