மனைவி கர்ப்பமானபோது கருவைக் கலைக்க முயன்ற கணவன்... மூன்று ஆண்டுகள் ஆனபிறகு செய்த வெறிச்செயல்

Kishanthini
Report this article
கனடாவில் தன் மனைவி கர்ப்பமானபோது அவரது கருவைக் கலைக்க முயன்ற ஒருவர், அப்போது தன் முயற்சியில் தோற்றாலும், குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் ஆனபிறகு அந்த குழந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
புருண்டி என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த Frank Nausigimana (28), தன் மனைவி கர்ப்பமுற்றபோது அவரது கருவைக் கலைக்க முயன்றுள்ளார்.
நடிகர் கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் என்ற திரப்படத்தில் வருவதுபோல, கட்டாயப்படுத்தி ஒரு நச்சுத் திரவத்தை மனைவி வாயில் ஊற்றி கருவைக் கலைக்க முயன்றுள்ளார் Frank. ஆனால், அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.
தற்போது, குழந்தை பிறந்து அதற்கு மூன்று வயதாகும் நிலையில், வின்னிபெக்கில் வாழ்ந்து வரும் அவர், Jemimah (3) என்னும் தன் சொந்தக் குழந்தையையே அவளது தாயிடமிருந்தே கடத்தி, கத்தியால் குத்தி கோரமாக கொலை செய்துள்ளார்.
சமீபத்தில் குழந்தையின் வளர்ப்பில் தனக்கும் உரிமை வேண்டுமென்று கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் Frank.
ஆனால், அது உண்மையிலேயே குழந்தையின் மீதான அக்கறையிலா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.