ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை தொடர்பில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்
ஒலிம்பிக்கில் 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் Margaret MacNeil என்ற இளம்பெண். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், Margaretக்கு கண்பார்வையில் கொஞ்சம் பிரச்சினை உள்ளது. அத்துடன் அவருக்கு ஆஸ்துமா பிரச்சினை வேறு உள்ளது.
21 வயதாகும் Margaret, தான் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தாராம். காரணம், தான் தங்கம் வென்றது அவருக்கே தெரியாது.
ஏனென்றால், கண் பார்வை பிரச்சினைக்காக காண்டாக்ட் லென்ஸ் அணியும் Margaret, நீந்தும்போது காண்டாக்ட் லென்ஸ் அணியாததால், பக்கத்தில் யார் நீந்துகிறார்கள் என்பதைக் கூட அவரால் பார்க்கமுடியவில்லையாம்.
ஆனால், அதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டிருக்கிறார் Margaret. என் பக்கத்தில் யார் நீந்துகிறார்கள் என்பதே எனக்குத் தெரியவில்லை.
அதுவும் நல்லத்துக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு என்னுடையை நீச்சலில் மட்டும் கவனம் செலுத்தி நீந்தினேன் என்கிறார் Margaret.