ஒரே ஆண்டில் 1000 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு
கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக Amnesty International தகவல் வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்திருந்தாலும், குறிப்பிட்ட சில நாடுகள் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதுடன், நிறைவேற்றியும் வருகிறது.
இதில் சீனா 2021ல் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும், ஈரான் 314 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும் Amnesty International குறிப்பிட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் 83 எண்ணிக்கையுடன் எகிப்தும், நான்காவது இடத்தில் 65 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியாவும் ஐந்தாவது இடத்தில் 24 எண்ணிக்கையுடன் சிரியாவும் உள்ளது.