கனடிய பிரதமர் அலுவலகத்தின் எதிரில் இளம் யுவதி அரைநிர்வாண போராட்டம்
கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அலுவலகத்தின் எதிரில் இளம் யுவதியொருவர் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற விருது வழங்கல் விழாவில் அரைநிர்வாணமாக தோன்றிய அதே யுவதியே பிரதமர் அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதி அரை நிர்வாணமாக பிரதமர் அலுவலக நுழைவாயிலுக்கு அருகாமையில் சங்கிலியால் தன்னைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலநிலை பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் எனவும் ஐந்து பத்து ஆண்டுகளில் தீர்வு வழங்குவதில் பயனில்லை எனவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட யுவதியை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சங்கிலியிலிருந்து விடுவித்துள்ளனர்.