உலகின் மோசமான பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள டொரன்டோ
கனடாவின் டொரன்டோ நகரம் உலகின் மோசமான பட்டியல் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளது.
உலகின் காற்றின் தரம் குறைந்த நகரங்களின் வரிசையில் டொரன்டோ நகரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வளி தரம் குறித்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக கனடாவின் அனேகமான பகுதிகளில் இவ்வாறு காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
குறிப்பாக டொரன்டோ பெரும்பாகப் பகுதி, ஹமில்டன் பகுதி போன்றவற்றின் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் காற்றின் தரம் மிகவும் மோசமான நகரமாக சிக்காகோ கருதப்படுகிறது.
கனடாவின் காட்டுத்தீ புகைகள் சிக்காகோ நகரை அடைந்துள்ளதனால் இவ்வாறு மோசமான காற்றின் தரத்தை கொண்ட நகரங்களில் ஒன்றாக சிக்காகோ அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட ஆறாவது நகரமாக டொரன்டோ நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் மிகவும் குறைவடைந்து வரும் நிலையில் ஆரோக்கிய கேடுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.