ரொறன்ரோவில் வாகனக் கொள்ளை கப்புறுதி நட்டஈட்டுத் தொகை 561 வீதத்தால் உயர்வு
கனடாவின் ரொறன்ரோவில் வாகனக் கொள்கைக் காப்புறுதி நட்ட ஈட்டுத் தொகை 561 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாகனக் கொள்ளை காப்புறுதி நட்டஈட்டுக் கொடுப்பனவு தொகை வெகுவாக உயர்வடைந்துள்ளது.
கனடிய காப்புறுதி முகவர் நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில் ரொறன்ரோவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களுக்கான காப்புறுதி நட்டஈட்டுத் தொகையாக 56 மில்லியன் டொலர் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
எனினும் 2023ம் ஆண்டில் இந்தத் தொகை 372 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
2018ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வாகனக் கொள்ளை சம்பவங்களுக்கான காப்புறுதி நட்டஈட்டு கொடுப்பனவு தொகை 561 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் வாகனங்கள் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பிலான காப்புறுதி நட்டஈட்டுத் தொகை ஒரு பில்லியன் டொலர்கள் எனவும் இது 524 வீதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.