ரொறன்ரோவில் கடும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோ பிராந்தியத்தில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சுமார் பத்து சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடிய வளிமண்டலவியல் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களிலும் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் 10 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவும் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் ஏற்படும் எனவும் சில இடங்களில் சாரதிகளால் வீதியை பார்க்க முடியாத அளவிற்கு பனிப்பொழிவு நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.