காரை விட்டு விட்டு விடுமுறைக்காக சென்ற கனேடிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி
விடுமுறைக்கு வெளிநாடு சென்று விட்டு வீடு திரும்பிய ஒரு கனேடிய தம்பதியர், தங்கள் காரில் யாரோ சிலர் வாழ்ந்துவருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ரொரன்றோவில் வாழும் Kayla Duplantis-Whitewickம் அவரது கணவரும் 12 நாட்கள் ஐரோப்பிய சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.
அப்போது, அவர்கள் தங்கள் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஷெட்டில் விட்டுச் சென்றிருந்த காரில் யாருக்கோ சொந்தமான பல பொருட்கள் கிடப்பதைக் கவனித்துள்ளார்கள்.
A Toronto couple says they came home from a 12-day vacation to discover squatters living in their vehicle. https://t.co/UwjlSbHRh7
— CTV Toronto (@CTVToronto) June 21, 2023
மறுநாள் ஷெட்டிலிருந்து ஏதோ சத்தம் வருவதைக் கவனித்த தம்பதியர் சென்று பார்க்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் காருக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
உடனடியாக அவர்கள் பொலிசாரை அழைக்க, பொலிசார் அந்த ஆணைக் கைது செய்துள்ளார்கள், அந்தப் பெண்ணோ தப்பியோடிவிட்டார்.
பொலிசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபரைக் குறித்து அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த நபரைக் கைது செய்வதற்கு ஏற்கனவே பொலிசார் வாரண்ட் பிறப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
நல்ல வேளையாக அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை என்றும், யாரும் தாக்கப்படவில்லை என்றும் கூறும் Kayla, ஆனால், தாங்கள் ஆசை ஆசையாக வாங்கிய காரை அந்த நபர்கள் நாசமாக்கிவிட்டதாக தெரிவிக்கிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் வாழ்பவர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. Kayla வீட்டில் இப்படி நடந்தால், தங்களுக்கும் இதேபோல் நடக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.