கனடாவில் கனவு இல்லமாக விசித்திர இடத்தை கொள்வனவு செய்த குடும்பம்
கனடாவில் குடும்பம் ஒன்று குடியிருப்பதற்காக கனவு இல்லமாக மலர்ச்சாலை ஒன்றை கொள்வனவு செய்துள்ளது.
றொரன்டோவைச் சேர்ந்த ஹீத்தர் புளும்பேர்க் குடும்பம் இந்த மலர்ச்சாலையை கொள்வனவு செய்துள்ளது.
150 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் மலர்ச்சாலையாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
12000 சதுர அடிகளைக் கொண்ட இந்த வீட்டில் மொத்தமாக 38 அறைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புளும்பர்க் மற்றும் அவரது கணவர் அர்யன் மற்றும் அவர்களது பிள்ளைகளான 20 வயதான ரபார்டி மற்றும் 14 வயதான நோவா ஆகியோரே இந்த வீட்டில் தங்க உள்ளனர்.
599,999 டொலர்கள் விலை என பட்டியலிடப்பட்டிருந்த வீடு இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் பல மரண சடங்குகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டை வித்தியாசமான முறையில் புனரமைத்துள்ளதாக புளும்பர்க் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.