ரொறன்ரோவில் நபரொருவர் மீது சரமாரியான துப்பாக்கிச்சூடு! பெரும் அதிர்ச்சி சம்பவம்
ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 29 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொறன்ரோவின் ஸ்டொக்கியார்ட் மாவட்டத்தின் Down House பகுதியில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை முகக்கவசங்கள் அணிந்து கறுப்பு நிற ஆடை அணிந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த துப்பாக்சிச்சூடு தாக்குதலை நடாத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.