ரொறன்ரோவில் வீடு விற்பனை பாரிய வீழ்ச்சி
ரொறன்ரோவில் வீடு விற்பனையில் பாரியளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் வீட்டு விற்பனை 44 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீட்டு விற்பனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி வீதம் மற்றும் அடகுக் கடன் வட்டி என்பன உயர்வடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு வீட்டுக் கொள்வனவு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் 5038 வீடுகள் மட்டுமே கடந்த செப்டம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த மாதம் வீடுகள் விற்பனை செய்வதற்காக 11237 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.
வீடுகளின் சராசரி விலை 1.1 மில்லியன் டொலர்களாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.