புத்தாண்டில் ரொறன்ரோவில் பிறந்த முதல் குழந்தை
கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2022 ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் Humber River மருத்துவமனையில் Sreyphea மற்றும் Sambaph தம்பதிக்கு நள்ளிரவு 12 மணிக்கு ஆண் பிள்ளை பிறந்துள்ளது. புத்தாண்டில் கிடைத்த முதல் மகிழ்ச்சியான தகவல் இதுவென குறித்த தம்பதி தெரிவித்துள்ளது.
இதேவேளை, சனிக்கிழமை 12.01 மணிக்கு Markham Stouffville மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு Ryder James Ang என பெயரிட்டுள்ள பெற்றோர் முதல் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
புத்தாண்டு பிறந்து 9 நிமிடங்கள் கடந்த நிலையில் Mississauga-ன் Credit Valley மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் Nathan என பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையின் பெற்றோரான Anjali மற்றும் Geril தெரிவிக்கையில், விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் உள்ளோம், புத்தாண்டை சிறப்பாக்க இதைவிட பெரிய பரிசு இருக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
North York பொது மருத்துவமனையில் சனிக்கிழமை 12.26 மணிக்கு புத்தாண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. Mount Sinai மருத்துவமனையில் 1.36 மணிக்கு ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது.
Cortelluci வாகன் மருத்துவமனையில் 3.31 மணிக்கு புத்தாண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளதை மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.