தெற்காசிய சமூகத்தினை அச்சுறுத்தும் குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது
தெற்காசிய பிராந்திய வலய சமூகத்தைச் சேர்ந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்த நபர் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்காசிய இன சமூகங்களைச் சேர்ந்தவர்களை அச்சுறுத்தும் மற்றும் துன்புறுத்தும்" வகையில் இந்த நபர் பல குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது பொலிஸார் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் கடந்த 2024ம் ஆண்டு ஒக்டோபர் வரையிலான காலப் பகுதியில் இந்த நபர் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் பல்வேறு எண்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்துடன் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ரொறன்ரோவைச் சேர்ந்த 37 வயதான மேத்யூ சாண்டோரோ, என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.