ரொறன்ரோவை விட்டு வெளியேறும் மக்கள்
கனடாவின் ரொறன்ரோ நகரை விட்டு பலர் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கருத்து கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கொள்வனவு இயலுமையைக் கொண்ட நகரங்களில் வீடு கொள்வனவு செய்ய ரொறன்ரோ நகரவாசிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 900 கனடியர்களிடம் இது தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
வீடுகளை கொள்வனவு செய்யக்கூடிய நகரங்களில் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தொலைவில் இருந்து பணியாற்றக்கூடிய தொழில்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
வீடுகள் குறைந்த விலையில் காணப்படும் நகரங்கள் நோக்கி ரொறன்ரோ பிரஜைகள் நகர்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் செலவு கூடிய நகரங்களில் இருந்து செலவு குறைந்த நகரங்கள் நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.