டொரொண்டோவில் துப்பாக்கி சூடு: பொலிஸார் விசாரணை
டொரொண்டோ நகரில் பிரிச்மவுன்ட் வீதி Birchmount Road மற்றும் ஷெப்பர்ட் அவன்யூ Sheppard Avenue East பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கி சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவில், இந்த சம்பவம் அதிகாலை 2 மணிக்கு முன்னதாக நடைபெற்றதாகவும், அந்த பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணையின் போது, அதிகாரிகள் ஒரு துப்பாக்கி தோட்டாகத்தை (shell casing) கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது எந்த உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து தகவல் இல்லை. சந்தேகநபர் குறித்தும் எந்த விவரமும் வெளிவரவில்லை.
தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை (416-808-2222) தொடர்பு கொள்ளலாம் அல்லது அடையாளம் தெரியாமல் Crime Stoppers (416-222-TIPS) மூலம் தகவல் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.