டொரண்டோவில் இஸ்ரேலை ஆதரிக்கும் நடைபயணத்திற்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு
வருடாந்த யூனைட்டெட் ஜூயிஷ் அபீல் (UJA) 'வாக் வித் இஸ்ரேல்' நிகழ்வை முன்னிட்டு, டொரண்டோவில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு 56வது ஆண்டு அனுஷ்டிப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. “நிகழ்வு பாதுகாப்பாகவும், குறுக்கீடுகளின்றியும் நடைபெறும் என நம்புகிறோம்,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையில், மற்ற ரொறன்ரோ பெரும்பாக பகுதி (Greater Toronto Area) பொலிசாரும், ஒன்டாரியோ மாகாண பொலிஸாரும் (OPP) பங்கேற்கவுள்ளனர்.
வட யார்க்கில் உள்ள சுமார் நான்கு கிலோமீட்டர் பாதையில், சுற்றுவட்டார பகுதியில் பொலிசார் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர். சிலர் இந்த நிகழ்வை குழப்ப திட்டமிட்டிருப்பதை பொலிசார் அறிவதாக போக் தெரிவித்தார்.
“அமைதியான கூட்டங்கள் மற்றும் கருத்துப் பரப்பலுக்கான உரிமையை பாதுகாக்கிறோம். ஆனால், அச்சுறுத்தல், தொந்தரவு, வன்சொற்கள் அல்லது குற்றச்செயல்கள் என்பனவற்றுக்கு இடமளிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.