டொரன்டோவில் ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை தேடும் பொலிஸார்
டொரன்டோவில் ஆயுத முனையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 5 மற்றும் 11 ஆகிய திகதிகளுக்கிடையில் புளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்டன் அவென்யூ, புளூர் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் ஷெர்போர்ன் ஸ்ட்ரீட், மற்றும் காலேஜ் ஸ்ட்ரீட் மற்றும் லான்ஸ்டோவ்ன் அவென்யூ ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
நபர் கடைகளில் புகுந்து ஆயுத முனையில் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது.
இரண்டு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபரினால் பணத்தை கொள்ளையிட முடியவில்லை எனவும், ஒரு கடையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சந்தேக நபர் 20 முதல் 30 வயதுக்குள், சுமார் 5 அடி 8 அங்குல உயரம் மற்றும் நடுத்தர உடல் கட்டியவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.