கனடாவில் 83 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு
கனடாவில் சுமார் 83 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போதை பொருட்களுடன் இரண்டு மெக்ஸிகோ பிரஜைகளும் நான்கு கனடியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் மூவரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிஸ்ஸிசாகாவில் இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யோர்க் பிராந்திய போலீசார் கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் வின்ட்ஸோர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த போதைப் பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 475 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.