கனடாவில் ஆபத்தானவராக அறிவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்!
கனடாவின், பீல் (Peel) பிராந்திய பொலிசார் , ஆபத்தானவராக தமிழ் இளைஞரை அறிவித்துள்ளதுடன், அவரை தேடி வருகின்றனர்.
சந்தேக நபர் தொடர்பில், பொலிசார் தங்கள் விசாரணை குறித்த விவரங்களை வெளியிடவில்லை, தேடப்பட்டும் சந்தேக நபர் டொராண்டோவைச் சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என அடையாளம் கண்டுள்ளனர்.
இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள்
அவர் மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், ஒரு துப்பாக்கியை பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு, அங்கீகரிக்கப்படாத துப்பாக்கியை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டு, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதோடு சந்தேக நபரான தமிழ் இளைஞரை விரைவில் சரணடையுமாறு போலீசார் வலியுறுத்துகின்றனர். பிரதீபன் நாகராஜாவுடன் தொடர்பு கொண்டிருந்த எவரும் அல்லது அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவரைக் கண்டுபிடிப்பவர்கள் அவரை அணுக வேண்டாம், அதற்கு பதிலாக உடனடியாக 911 என்ற எண்ணை அழைக்கவும். அவர்கள் 905-453-2121 நீட்டிப்பு 4990 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறும் பீல் (Peel) பிராந்திய பொலிசார் கூறியுள்ளனர்.