பிரபல பாடசாலை மாணவர்கள் 54 பேர் வைத்திய சாலையில் அனுமதி!
பாணந்துறையில் றோயல் கல்லூரியின் 40க்கும் மேற்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நச்சுப் புகை
மாணவர்கள் நச்சு புகையினை சுவாசித்து சுகவீனமடைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அதுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்கு அண்மையிலுள்ள வீடொன்றின் குப்பை எரித்ததில் அதிலிருந்து கிளம்பிய புகை விஷமானதில் அதனை சுவாசித்த மாணவர்கள் 54 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயர்கள், அடங்கிய குப்பையை எரித்தமையால் விஷம் கலந்த புகை கிளம்பியுள்ளது என அறியமுடிகின்றது. இன்னும் சிலர், அம்புலன்ஸ் வண்டிகளின் ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை விடயத்தை கேள்வியுற்று பாடசாலைக்கு விரைந்த பெற்றோர்கள் சிலர், தங்களுடைய பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் என்றும் அறியமுடிகின்றது.