இலங்கையில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த துயரம்.... விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்

Praveen
Report this article
யாழில் 13 வயது சிறுமிக்கு நபர் ஒருவரால் ஏற்பட்ட துயரம் தொடர்பில் நிகழ்த்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழின் கொக்குவில் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரிடம் ஒளிபடப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ச
ந்தேக நபரால் எடுக்கப்பட்ட சிறுமியின் சில காணொளிகள் வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். அதோடு கைதான சந்தேகநபர் யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த ஒன்றரை வருடமாக நடந்து வருவதாக சிறுமி வாக்குமூலம் அளித்தார், பிறகு சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிறுமி தொடர்பிலான காணொளிகளை சந்தேக நபர் கீழ் பணிபுரியும் சிலர் வைத்திருந்ததும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கண்டறியப்பட்டது.
ஒளிப்படங்களை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.