அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர் சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி. பெர்கேலே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவர் திடீரென காணவில்லை. இதையடுத்து, இந்திய மாணவர் ஒருவர் மாயமான புகார் வந்ததைத் தொடர்ந்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க சான் பிரான்சிஸ்கோ பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், காணாமல்போன மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாணவர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், மாணவர் சடலம் மீட்கப்பட்டது குறித்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.