ஆப்கானில் துயரம்; விமானத்திலிருந்து விழுந்து பரிதாபமாக இறந்த பிரபல வீரர்
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அந்நாட்டைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஒருவரும், விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் உயிரிழந்ததை ஆப்கானிஸ்தான் தேசிய இளையோர் கால்பந்து அணியின் பேஸ்புக் பக்கம் உறுதி செய்துள்ளது. 19 வயதான சாகி அன்வாரி, ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து இளையோர் அணிக்காக விளையாடியவர்.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தலிபான்கள் காபூலை கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து தப்பி ஏராளமானவர்கள் விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபத்தமான முறையில் நாட்டைவிட்டு வெளியேற முயன்றனர்.
விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபதான பயணம் செய்து உயிரிழந்தவர்களில் சாகி அன்வாரியும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போயிங் சி -17 விமானத்தில் சென்றபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் இளம் கால்பந்து வீரரின் மறைவுக்கு சக வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.