பிரான்சில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி இம்மானுவல்!
நேற்று புதன்கிழமை காலை மாணவன் ஒருவன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலி, ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அஞ்சலி வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கூறுகையில், ‘ஆசிரியர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் எனக்குள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரின் குடுப்பத்தினரது, சக ஆசிரியர்களது மற்றும் மாணவர்களது வலியை நான் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆசிரியர்கள் எதிர்கால சந்ததியினருக்காக தன் வாழ்நாளைச் செலவிடுகின்றனர். இந்த தேசம் உங்களுக்காக உங்களோடு இருக்கும்’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
Saint-Jean-de-Luz நகரில் உள்ள லீசே (Lycée) Saint-Thomas-d'Aquin இல் நேற்று புதன்கிழமை காலை இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. 16 வயதுடைய மாணவன் ஒருவன் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரைக் கத்தியால் குத்தியதில், ஆசிரியர் பலியாகியுள்ளார்.