ஆந்திர மாநிலத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து!
ஆந்திரா மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் உள்ள புகையிரத தடத்தில் விசாகா- ராயகாடா பயணிகள் புகையிரதம் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதே தண்டவாளத்தில் பயணித்த பலாசா எக்ஸ்பிரஸ் புகையிரதம் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் பயணிகள் புகையிரத்தின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதால் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு புகையிரத பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
மீட்பு பணிகளை துரிதப்படுததுமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.