பேருந்து மீது ரயில் மோதியதில் 8 பேர் பலி ; 45 பேர் காயம்
மெக்சிகோவில் இரண்டு தட்டு பேருந்து ஒன்றின் மீது தொடருந்து மோதியதில் 8 பேர் பலியாகினர். மேலும், 45 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவின் வடமேற்கே உள்ள அட்லகோமுல்கோ (Atlacomulco) நகரில் இன்று (08) தொடருந்து கடவையில் சிக்கிய இரண்டு தட்டு பேருந்து மீது தொடருந்து மோதி விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணிகள்
தகவல் அறிந்த அந்த நாட்டு காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடருந்து கடவை அருகே இரண்டு தட்டு பேருந்து வந்த நிலையில், பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 45 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.