நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தொழிலாளர்கள்: மீட்பு நடவடிக்கைகள் துரிதம்
மெக்சிகோவின் கோஹுய்லா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்த நிலையில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமையில் இருந்தே குறித்த 10 தொழிலாளர்களும் அந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். தற்போது அவர்களின் நிலை தொடர்பில் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுரங்கத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் 400க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு போராடி வருகின்றனர்.
ஞாயிறன்று நாட்டின் ஜனாதிபதி சம்பவப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டார்.
தண்ணீரின் அளவு தற்பொது அதிகமாக இருப்பதால், மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துவது ஆபத்தாக முடியலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் நொடிக்கு 350 லிற்றர் தண்ணீரை வெளியேற்றி வருவதாகவும், தொழிலாளர்களை உயிருடன் மீட்க போராடி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.