கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணங்களில் வீழ்ச்சி
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு திரும்பிய கனடிய பிரஜைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்தம் 30 வீதத்தினால் குறைந்துள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த புதிய தரவுகளை வௌியிட்டுள்ளது. இது, 2006ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாக அமெரிக்கர்களின் கனடா பயணங்கள், கனடியர்கள் அமெரிக்கா பயணித்ததை விட அதிகமாக இருந்ததைக் குறிக்கிறது.
இதற்கு முன் இதே நிலைமை 2021 செப்டம்பர் மாதத்தில், கொவிட்-19 காலத்தில் — மட்டுமே ஏற்பட்டது. அமெரிக்க குடியிருப்பாளர்களின் கனடா வருகைகளும் தொடர்ந்து ஏழாவது மாதமாக குறைந்துள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.4% குறைவு பதிவாகியுள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் வாகன வழியாக கனடாவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2024 ஆகஸ்ட்டுடன் ஒப்பிடும்போது 3.2% குறைந்தது.
அமெரிக்கா–கனடா பயணங்களில் குறைவு ஏற்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய கனடியர்களின் எண்ணிக்கை 9.2% உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆசியா பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கையே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும்.