மயில் குஞ்சுகளுடன் களவாடப்பட்ட வாகனம் ; பொலிஸார் வலைவீச்சு
கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஸ்டோனி பிளெய்ன் (Stony Plain) பகுதியில், இரண்டு மயில் குஞ்சுகளுடன் திருடப்பட்ட டிரக் ஒன்றை ராயல் கனடிய பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை மதியம், போல்டர் பவுலேவர்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த '2005 ஃபோர்டு F350' (Ford F350) ரக வெள்ளை நிற டிரக் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
அந்த வாகனத்திற்குள் கூண்டுகளில் அடைக்கப்பட்ட இரண்டு மயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திருடப்பட்ட அந்த வாகனம் 'SY7996' என்ற பிரிட்டிஷ் கொலம்பியா உரிமத் தகட்டைக் கொண்டுள்ளது.
மேலும், அலுமினிய பெட் ரெயில்கள், அதன் மேல் பகுதியில் விளக்குகள் பொருத்தப்பட்ட ரேக் மற்றும் முன்பக்க கிரில் பகுதியில் கூடுதல் விளக்குகள் கொண்ட குரோம் பம்பர் ஆகியவற்றுடன் இந்த டிரக் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனத்திற்குள் இருக்கும் பறவைகளின் பாதுகாப்புக் குறித்து கவலை தெரிவித்துள்ள காவல்துறையினர், இது தொடர்பான தகவல் தெரிந்தால் உடனடியாக '825-220-7267' என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.