கனடிய பிரதமர் டிரம்பை சந்தித்தார்
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புளொரிடாவின்வில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் மாறலாகோ வீட்டில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லேபிளாங்க் பங்கேற்றார் என தெரிவிக்கப்படுகிறது.
டிரம்ப் அரசாங்கத்தின் உள்துறை செயலாளர் வர்த்தக செயலாளர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்பட இருப்பவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப் போவதாக அண்மையில் டொனால்ட் டிரம்ப பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.