கனடா பிரதமர் ட்ரூடோ தலைமறைவு; கேலிக்குள்ளாக்கும் இந்திய இணையவாசிகள்!
கனடாவில் தடுப்பூசி ஆணைக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau )தலைமறைவாகியுள்ளதை விமர்சித்து இந்திய சமூக ஊடக பயனர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் பயணம் செய்பவர்கள் போன்ற எல்லை தாண்டிய டிரக்கர்களுக்கு கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்ற கனடிய அரசாங்கத்தின் ஆணைக்கு டிரக்கர்கள் எதிர்பு தெரிவித்து வருகின்றனர்.
கனடாவின் தடுப்பூசி ஆணைக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் டிரக் ஓட்டுனர்கள் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்து 'Freedom Convoy' எனும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்ததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau ), தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விவசாயிகளின் போராட்டங்களை ஆதரித்ததற்கான தக்க பலனைத் தான் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau ) இப்போது அனுபவிப்பதாக இந்தியாவில் உள்ள சில சமூக ஊடக பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய தலைநகர் புது தில்லியின் எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டங்களுக்கு கனேடிய பிரதமர் எப்படி ஆதரவளித்தார், ஆனால் தனது நாட்டிலொரு மக்கள் போராட்டம் என் வந்ததும் பயந்து ஓடி அழிந்துகொள்வதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.