தலைமை பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை
கனடிய பிரதமர் கனடாவில் லிபரல் கட்சியில் தாம் வகித்து வரும் தலைமை பதவியில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமை பதவியில் மாற்றம் செய்வதன் மூலம் லிபரல் கட்சிக்கு நன்மை ஏற்படும் என்ற வாதத்தை தான் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் ஜனாதிபதி வேட்பாளர் பதவியில் இருந்து விலகியமை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிக நெருக்கடியான தருணத்தில் கனடாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலுவான பொருளாதரத்தைக் கொண்டு கனடியருக்கு உதவ முடியும் எனவும் தாம் நம்புவதாகவும் எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டி எழுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கலாச்சார போர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப் போவதில்லை என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.