சூரியன் உதிப்பதைக் காண கனடா வந்ததாகக் கூறியதால் கேலி செய்யப்பட்ட இளம்பெண்: ட்ரூ காலர் நிறுவனம் ஆதரவு

Viral Video India Canada
By Balamanuvelan Aug 04, 2023 07:08 AM GMT
Report

கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக வந்துள்ள இந்திய இளம்பெண் ஒருவரிடம், நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட, அந்தப் பெண் கூறிய பதிலால் அவரை கடுமையாக கேலி செய்தனர் நெட்டிசன்கள்.

இந்தியாவை விட்டு வெளியேறுவது தனது கனவு என்றும், கனடாவில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதே தனக்குப் பிடித்த விடயம் என்றும் தெரிவித்திருந்தார் ஏக்தா என்னும் பெயர் கொண்ட அந்த பெண்.

அந்த இளம்பெண் பேசும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அவரைக் கிழித்து தொங்கவிடாத குறையாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அப்படியானால், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் இந்தியாவில் பார்க்கமுடியாதா என ஒருவர் கேள்வி எழுப்ப, மற்றொருவரோ, நான் ஒரு ஆண்டு கனடாவில் வாழ்ந்தேன், கோடை நன்றாக இருந்தது, ஆனால் குளிர்காலம் பயங்கரமாக இருந்தது என்று கூறியிருந்தார்.

ஆக, இந்த பெண் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதற்காகவே கனடா சென்றுள்ளார், ஆனால், நீங்கள் இந்தியாவில் உங்கள் வீட்டு மாடிக்குப் போனாலே சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கமுடியுமே என மற்றொருவர் விமர்சித்திருந்தார்.

இப்படி ஏக்தா கடுமையாக விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ள நிலையில், பிரபல நிறுவனமான ட்ரூ காலர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான Alan Mamedi, ஏக்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

சூரியன் உதிப்பதைக் காண கனடா வந்ததாகக் கூறியதால் கேலி செய்யப்பட்ட இளம்பெண்: ட்ரூ காலர் நிறுவனம் ஆதரவு | Truecaller Ceo Offers Job To Canada Student

Alan, சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மக்கள் ஏக்தாவை தவறாகப் புரிந்துகொண்டு அவரை கேலி செய்கின்றனர். இது சரியல்ல, ஏக்தா, அந்தக் கோமாளிகள் உங்களைக் கேலி செய்வதைக் கண்டுகொள்ளாதீர்கள். நீங்கள் கூலாக இருக்கிறீர்கள் என்றும், உங்கள் கனவுகளின்படி வாழ்கிறீர்கள் என்றும் நான் நினைக்கிறேன். உங்கள் படிப்பை முடித்ததும், நீங்கள் உலகின் எந்த நாட்டிலுள்ள ட்ரூ காலர் அலுவலகத்தில் விரும்பினாலும் பணி செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இப்படி Alan ஏக்தாவுக்கு ஆதரவு தெரிவிக்க, அதையும் விமர்சித்துள்ளார்கள் சிலர். பயோடெக் படித்த ஒருவருக்கு, ட்ரூ காலர் நிறுவனத்தில் வேலையா? நேர்காணல் கிடையாது, CV தேவையில்லை, இந்தியாவை விட்டதால் அவருக்கு வேலை வழங்குவீர்களா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரையும் விடவில்லை Alan. எங்கள் நிறுவனத்தில் பணி புரிய, நன்கு கற்ற, உயர்ந்த நோக்கங்களும், புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கொண்ட ஒருவர் போதும், சொல்லப்போனால், எங்கள் நிறுவன CFO, ஒரு space physicist! என்று அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.  

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US