வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி லாபம் பார்க்க முயல்கிறார்: ட்ரூடோ மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவுடனான வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி மீண்டும் கனடா பிரதமராக முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
கனடா மீது அமெரிக்கா வரி விதிக்க இருப்பதாக கூறியுள்ள விடயம் ஒவ்வொரு நாளும் ஒரு வடிவம் எடுக்கிறது.
ட்ரம்ப் வரி விதிக்கிறார், பிறகு தள்ளி வைக்கிறார், இப்படியே அந்த பிரச்சினை இழுத்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், ட்ரம்ப் தனது சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரூடோ கனடாவுக்காக இவ்வளவு மோசமான வேலையைச் செய்துள்ள நிலையிலும், அமெரிக்காவுடனான வரி பிரச்சினையை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் என்று நினைக்கிறேன்.
வரி பிரச்சினைக்கு அவரே முக்கிய காரணமாக இருந்தும், அந்த பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் பிரதமராக முயற்சிக்கிறார் ட்ரூடோ, வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.