வெள்ளை மாளிகையில் பகைகளை மறந்து கைகுலுக்கிய ட்ரம்ப் - பெட்ரோ; You are great கையெழுத்திட்டு பரிசு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ ஆகியோரின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு, எதிர்பாராத விதமாக மிகவும் சுமுகமாக நடந்து முடிந்துள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு தலைவர்களும் நீண்டகாலமாக ஒருவரையொருவர் கடுமையாக கடுமையாக விமர்சித்து வந்தனர். அதோரு இருவரும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்கள் .

பெட்ரோ ஒரு "அற்புதமான மனிதர்"
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ட்ரம்ப் கொலம்பியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்ததாலும் இச்சந்திப்பு பெரும் பதற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த சுமார் இரண்டு மணிநேர உரையாடல் மிகவும் நேர்மறையாக அமைந்தது.

சந்திப்பிற்குப் பிறகு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், பெட்ரோ ஒரு "அற்புதமான மனிதர்" என்றும், தங்களுக்குள் ஒரு நல்ல சந்திப்பு நடந்ததாகவும் புகழாரம் சூட்டினார். இது சில வாரங்களுக்கு முன்பு அவரை "கொடூரமானவர்" என விமர்சித்ததற்கு நேர்மாறாக அமைந்தது.
இந்தச் சந்திப்பின் போது, ட்ரம்ப் தனது புகழ்பெற்ற 'The Art of the Deal' புத்தகத்தில் "நீங்கள் ஒரு சிறந்தவர்" (You are great) என பெட்ரோவுக்கு பரிசாக வழங்கினார்.
இதற்குப் பதிலாக, பெட்ரோ தனது நாட்டின் பாரம்பரிய 'வூனான்' (Wounaan) கைவினைப் பையை ட்ரம்ப்புக்கும், கைகளால் நெய்யப்பட்ட ஆடையை மெலனியா ட்ரம்ப்புக்கும் பரிசாக வழங்கினார்.
சந்திப்பின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போர் மற்றும் வெனிசுவேலாவின் அரசியல் நிலைத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதோடு கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் கொக்கேய்ன் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த பெட்ரோ அரசாங்கம் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தினார்.
அண்மையில் அமெரிக்காவினால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதில் கொலம்பியாவின் பங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பெட்ரோ தனது நாட்டின் 'மேக் த அமெரிக்காஸ் கிரேட் அகெய்ன்' (Make the Americas Great Again) என்ற கருத்தியலை முன்வைத்தார்.
அதேவேளை எவ்வித பெரிய ஆரவாரங்களும் இன்றி தனிப்பட்ட முறையில் நடந்த இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலைச் சரிசெய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.