பின்வாங்கிய ட்ரம்ப் ; சீன அதிபரை 2 வாரங்களில் சந்திப்பேன்
சீன அதிபர் ஜி ஜின் பிங்கை 2 வாரங்களில் சந்திப்பேன். 100% வரி விதிப்பு நிலையானது அல்ல என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவ., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்து இருந்தார்.
வரி விதிப்பு
இதனால், சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்தது. இந்த வரி விதிப்பிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 'இரண்டு வாரங்களில், சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்திப்பேன். 100% வரிகள் நீடிக்க முடியாதவை. இத்தகைய நடவடிக்கை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது.
அவர்கள் என்னை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தினர்' என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதட்டங்களை குறைக்க வழி வகுக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.