காசாவில் இனப்படுகொலையை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு டொனால்ட் டிரம்ப் தடை விதிப்பு
இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
காசாவிலிருந்து மில்லியன் கணக்கான பலஸ்தீனர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டம் "மீண்டும் யுத்தத்தைத் தூண்டும்" என்று எகிப்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜோர்தான் மத்திய கிழக்கில் குழப்பத்தைப் பரப்பி இஸ்ரேலுடனான அதன் அமைதியைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.
யுத்தம் நிறைவுற்று என்கிளேவின் மக்கள் வேறு இடங்களில் மீள் குடியேற்றப்பட்ட பிறகு, இஸ்ரேல் காசாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று டிரம்ப் கூறினார்.
இதன் பொருள் தரையில் எந்த அமெரிக்கப் படைகளும் தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
காசா மக்களைத் தாமாகவே முன்வந்து வெளியேற அனுமதிக்கும் திட்டத்தைத் தயாரிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.